Saturday 4 January 2014

சனி கிரகம்

சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் 440 கோடி ஆண்டுக்கு முன் உருவானது: நிபுணர்கள் தகவல்
சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் 440 கோடி ஆண்டுக்கு முன் உருவானது: நிபுணர்கள் தகவல்
சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் 440 கோடி ஆண்டுக்கு முன் உருவானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சனி கிரகத்துக்கு உண்டு. இக்கிரகத்தை மட்டுமே வட்ட வடிவ வளையங்கள் சூழ்ந்துள்ளன.
இவை எப்போது உருவானது என்ற சர்ச்சை விஞ்ஞானிகளிடையே பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் 440 கோடி ஆண்டுக்கு முன் உருவானது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘நாசா’ மையம் வாஸ்சின் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காஸ்மிக் டஸ்ட் அனலைசர் என்ற கருவி மூலம் சனி கிரகத்தின் வளையங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளன.
இதை வைத்து போல்டரில் உள்ள கொலொரடோ பல்கலைக்கழக விஞ்ஞானி கச்சா கெம்ப் ஆய்வு செய்தார். அதில் சனி கிரகத்தை சுற்றியிருக்கும் வளையங்கள் மயிரிழை போன்ற மிக மெலிதாக உள்ளன.
2 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் படர்ந்து இருக்கும் இவை நீள்வட்ட வடிவில் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

No comments: