Wednesday 9 December 2015

பள்ளியின் அவலநிலை

டிசம்பர் மாத மழையில்  பள்ளி வளாகம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை . ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கட்டிடம் பழுதுபார்க்கும் திட்டத்தின்படி  பள்ளிக்கட்டிடத்தின் கூரை தட்டோடு பதிக்கப்பட்டது.அதுதரமான  முறையில் போடததால்  இம்மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் தண்ணீர் ஒழுகி தரை,
மேசை ,கணினிகள்,புகைப்படங்கள் ,பேன்கள் லைட்டுகள் ,மாணவர்களின் சுயவருகைபதிவேடுகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளன.கடந்த 08.12.2015 அன்று எடுத்த  படங்கள் இவை .












Tuesday 24 November 2015

பாரதிதாசனின் கவிதையில் ஒரு துளி

கனியிடை ஏறிய சுளையும்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்;;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிகு உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில் போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!

நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர் வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல் மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில்
நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

Thursday 19 November 2015

பார்வை

18.11.2015 புதன்கிழமை  எங்களது உதவி தொடக்கக்கல்வி  அலுவலர்
திரு ஆர் .பாலசுப்ரமணியன்   அவர்கள்   பள்ளியை பார்வையிட்டார்கள்.அப்போது  பழைய பள்ளி கட்டிடம்  இடிக்கப்பட்டு வருவதை  நேரில் ஆய்வு செய்தார்கள் .




Wednesday 11 November 2015

தீபாவளி 2015

எங்கள் பள்ளி குழந்தைகளின் தீபாவளி  வர்ணஜால புத்தாடைகள்
மத்தாப்பாய்  மலரும் புன்னகையுடன்

Monday 9 November 2015

பள்ளி கட்டிடம் இடிப்பு

எங்களது  கனவாக இருந்த பழைய ஓட்டுகட்டிடம் (60 வயதான பள்ளி கட்டிடம் ) தற்சமயம் இடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் நிம்மதியாக உள்ளோம்,



Thursday 22 October 2015

கலைமகள் விழா

20.10.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கலைமகள் விழா  மாணவர்களின் பங்கேற்ப்புடன் கொண்டாடப்பட்டது .





Thursday 15 October 2015

இளைஞர் எழுச்சி நாள்

இன்று (15.10.2015)  எமது பள்ளியில்   பாரதரத்னா டாக்டர்அப்துல்கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.பேச்சு போட்டி நடத்தப்பட்டது.






உலக கை கழுவும் தினம்

இன்று (15.10.2015)  எமது பள்ளியில் உலக கை கழுவும் நாள் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் உறுதிமொழி  ஏற்றனர். கைகழுவுதலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.








Wednesday 14 October 2015

மருத்துவ முகாம்

கடந்த  09.10.2015 (வெள்ளிக்கிழமை ) காலை எமது பள்ளியில்  ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார மருத்துவக்குழு மாணவர்களை  நன்கு பரிசித்து ஆலோசனையும்  மருந்துகளும் வழங்கப்பட்டது .

Wednesday 26 August 2015

அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26

வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது - அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26

    தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா

ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.


         கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ.

யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.

1922-ஆம் ஆண்டில் தனது 12-ஆவது வயதில், சொந்த ஊரில் பெற்றோர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவதையே வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் எனக் கடவுள் தனக்குக் கட்டளையிட்டதாக குறிப்பிடும் தெரசா, மற்றவர்களுக்காகத் தனது வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டார். தொண்டுக்காகப் பிறந்தவள் தான் என்பதை உணர்ந்த தெரசா, இந்தியாவின் கல்கத்தா நகரில் யுகோஸ்லோவியக் கிறித்துவ மிஷினர்கள் தொண்டாற்றுவதைக் கேள்விப்பட்டுத் தானும் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். 1929-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்தார். தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1946-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கிற்குத் தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு தனது கனவில் கடவுள் அழைப்பதாக குறிப்பிடும் தெரசா, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்குக் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பாண்டவரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார். 

தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் கருணை இல்லம் (’மிஷினர் ஆப் சேரிடிஸ்’) என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார்.

சமூகத்தில் கைவிடப்பட்டவர்களான தொழு நோயர்களையும் சாவின் விளிம்பில் கிடந்த பிச்சை எடுப்பவர்களையும் தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து உதவினர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது. தெரசாவின் கருணை உள்ளத்தால் உருவான அந்த அமைப்பு பல நாடுகளிலும் பரவியது. இதனால், தொண்டின் மறு உருவமான தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, 1973-இல் டெம்லெடொன் விருது, 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது, 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. அவரைப் புகழ்ந்தவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் விடையளித்தார். கடவுள் இருப்பதாக கூறி தொழுபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது! அன்னை தெரசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.

Saturday 22 August 2015

எங்கள் பள்ளியின்  சுதந்திர தின விழா 












நாம்கோ தொண்டு நிறுவன தொண்டர்கல்லின் சைல்டு லைன் விளக்கங்கள்

Tuesday 4 August 2015

கைவினை

மாணவர்களுக்கு களிமண்ணில் கலைப்பொருள் தயாரிப்பு  பயிற்சி ,அலங்கார பொருள்கள் தயாரிப்பு பயிற்சி தரப்பட்டது. தங்கள் படைப்புகளுடன் மாணவ கண்மணிகள் .