Wednesday 30 July 2014

மனிதனின் மூளை


 ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும் 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது

மனிதமூளை !

* ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன.
* ஆண் மூளைதான் பெரியது.
* ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்த வல்லவர்கள் பெண்கள். ஆண்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே செயலில்தான் கவனம் செலுத்துவார்கள்.
* உடல், மன வளர்ச்சிகள் ஆண், பெண்ணுக்கு வெவ்வேறூ பருவங்களில் நிகழும்.
-- அ. ஐஸ்வர்யா, ஆனந்தவிகடன் , 16.. 06. 2010.

சதுரங்கபோட்டி



நாளை நடைபெறும் (31.07.14)சதுரங்க போட்டிக்காக 
எங்கள் பள்ளிமாணவர்களை தயார்  செய்த காட்சி 










Monday 28 July 2014

கக்கனும் புரட்சித்தலைவரும்



எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை...காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் மந்திரியாக வேறு இருந்தவர்...அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி...மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்...
தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர்...எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்...
எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று பெற்றுக் கொண்டவர்

தியாகி கக்கன் அவர்கள்!