Saturday 10 December 2016

முதலமைச்சர்கள் பட்டியல்

1920-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடந்தது ! தமிழக முதலமைச்சர்களை 'Premier’ என்றும் 'பிரதம மந்திரி’ என்று அழைக்கப்பட்டனர் அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர்களின் தொகுப்பு இங்கே:-

17.12.1920 முதல் ஆகஸ்ட் 1921 வரை -  அகரம் சுப்பராயலு ரெட்டியார்

தமிழகத்தில் 'நீதிக் கட்சி’ என்ற 'ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த கடலூரைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான 'திவான் பகதூர்அகரம் சுப்பராயலு ரெட்டியார், 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

உடல்நிலை காரணமாக 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் .

17.12.1921 முதல் 3.12.1926 வரை - பனகல் ராஜா

'பனகல் ராஜாவின் முழுப் பெயர் 'ராஜாராமராயநிங்கர்’, உடல்நிலை காரணமாகத் தமது பதவியை இடையிலேயே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்!

4.12.1926 முதல் 27.10.1930 வரை - டாக்டர் பி.சுப்பராயன்

1926-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 'சுயராஜ்யக் கட்சியினரால் (காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு) கவரப்பட்ட 'நீதிக் கட்சியின் ஆதரவில் இருந்த டாக்டர் பி.சுப்பராயன், 'Premier’ஆனார். 1930-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் பதவியில் இருந்து விலகினார்!

27.10.1930 முதல் 4.11.1932 வரை - 'பொலினி  முனுசாமி நாயுடு

'இவர் கொண்டுவந்த தீர்மானத்தினால்கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் வலுத்தன. இதனால் 'பொலினி’ முனுசாமி நாயுடு அதன் பிறகும் முதலமைச்சராகப் பதவி வகிப்பது இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்தார்!

5.11.1932 முதல் 4.4.1936 மற்றும் 25.8.1936 முதல் 31.3.1937 வரை - பொப்பிலி ராஜா.

நீதிக் கட்சியைச் சேர்ந்த இவர்,சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகுதிடீரென உடல்நலமின்றிப் போய்விட்டது.சிகிச்சைகள் முடிந்து 1936 ஆகஸ்ட் 25-ல் மீண்டும் பிரீமியராகப் பதவிக்கு வந்தவர்ஏழு மாதங்கள் கழித்து அவராகவே விலகிவிட்டார்!

4.4.1936 முதல் 24.8.1936 வரை - பி.டி. இராஜன்

'பொன்னம்பல தியாகராஜன்’ என்பது முழுப் பெயர். பொப்பிலி ராஜாவிடுப்பில் சென்ற காலத்தில்இவர் பிரீமியராகப் பதவியில் இருந்தார்!

1.4.1937 முதல் 15.7.1937 வரை - கே.வி.ரெட்டி

1937-ம் ஆண்டு மார்ச்சில் நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

15.7.1937 முதல் 29.10.1939 வரை - ராஜாஜி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி,சென்னை சட்டசபைக்கு பிரீமியராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற முழுப் பெயருடைய ராஜாஜி 1937-ம் ஆண்டு பதவி ஏற்றார். சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிரீமியராக இருந்தார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காரணமாகபிரிட்டிஷாருக்கும் மகாத்மா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு முற்றியது. காந்திஜி, 'எல்லா மாகாண சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் மற்றும் டெல்லி சட்டசபையில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு,பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராகத் தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து,ராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்!

இரண்டாவது உலக மகா யுத்தம்... பிரிட்டிஷார் நாடெங்கும் 'அவசர நிலைபிறப்பித்து இருந்தனர்.

1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை நாடெங்கும் எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. இந்தக் காலத்தில் தமிழகத்தில் பிரீமியர் யாரும் இல்லை!

30.4.1946 முதல் 23.3.1947 வரை - டி.பிரகாசம்

அடுத்து 1946-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பிரபலமானவருமான டி.பிரகாசம் சட்டசபைக்கு பிரீமியராகப் பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டி.பிரகாசம் மந்திரி சபை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்து  சட்டசபையில் வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. டி.பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது!

23.3.1947 முதல் 6.4.1949 வரை - ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

டி.பிரகாசம் மந்திரிசபை கலைக்கப்பட்ட அதே தினம் பிற்பகல்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் சட்டசபைக்குப் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் அடைந்த திருநாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடியது.

7.4.1949 முதல் 7.4.1952 வரை - பி.எஸ்.குமாரசாமிராஜா

'இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்’ அமலுக்கு வந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடக்க இருக்கவேபி.எஸ்.குமாரசாமி ராஜா பதவியில் இருந்து விலகினார்!

12.4.1952 முதல் 13.4.1954 வரை - சி.ராஜகோபாலாச்சாரியார் (எ) ராஜாஜி இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1953-ம் ஆண்டு இறுதியில் ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த 'புதிய கல்வித் திட்டத்தைச் சட்டசபையில் பலர் எதிர்த்தனர். ''இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்நான் இங்கு முதலமைச்சராகப் பதவியில் இருப்பதும் நியாயம் இல்லை!'' எனக் கூறி ராஜாஜி தம் பதவியை ராஜினாமா செய்தார்!

13.4.1954 முதல் 12.4.1957, 13.4.1957 முதல் 14.3.1962, 15.3.1962 முதல்1.10.1963 வரை - கு.காமராஜர்

ராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதுமே,காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்த, 'பெருந்தலைவர்’ என எல்லோராலும் அழைக்கப்பட்ட கு.காமராஜர்அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

1962-ம் ஆண்டு மூன்றாம் முறையாகவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வேலையில் இறங்குவதற்காகப் பாரதப் பிரதமரின் விருப்பப்படி 1963-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்!

2.10.1963 முதல் 5.3.1967 வரை - எம்.பக்தவத்சலம்

காமராஜர் விலகியதுமேஅதே அமைச்சரவையில் இருந்து எம்.பக்தவத்சலம் பதவியேற்றார். இவரது ஆட்சியில் அரசியல் இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன.

1967-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாட்டில் சட்டசபைக்கான பொதுத் தேர்தலில்காங்கிரஸ் கட்சிக்கு எதிரான - வலுவான கூட்டணி யும் ஏற்பட்டது.

அந்தச் சமயம்வலுவான அமைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் குதித்துஅதில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.

1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியோடு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்!

6.3.1967 முதல் 3.2.1969 வரை - சி.என்.அண்ணாதுரை

அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே முதல்வராக இருந்தார். 1968-ல் அவரது உடல்நலன் பாதிப்படைந்தது. அமெரிக்க நாட்டில் சிகிச்சை பெற்றுசென்னை திரும்பிய அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ல் காலமானார்!

இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள்.
மு. கருணாநிதி
10.2.1969 முதல் 5.1.1971 வரை
15.3.1971 முதல் 31.1.1976 வரை,
27.1.1989 முதல் 30.1.1991 வரை
13.5.1996 முதல் 14.5.2001 வரை
13.5.2006 முதல் இப்போது வரை

எம்.ஜி.ராமச்சந்திரன்
30.3.1977 முதல் 17.12.1980 வரை
9.6.1980 முதல் 15.11.1984 வரை,
10.2.1985 முதல் 24.12.1987 வரை.

ஜானகி ராமச்சந்திரன் - 7.1.1988 முதல்30.1.1988 வரை

ஜெ.ஜெயலலிதா

24.6.1991     முதல்    13.5.1996 வரை
14.5.2001    முதல்     21.9.2001 வரை
2.3.2002      முதல்     13.5.2006 வரை


16.05. 2011   முதல்   27.09.2014வரை
23.05. 2015   முதல்   22.05.2016 வரை


23.05. 2016   முதல்   05.12.2016 வரை

ஓ.பன்னீர்செல்வம் -
21.09.2001  முதல் 01.3.2002   வரை.
27.09.2014  முதல் 22.05.2015 வரை.
06.12. 2016 முதல் ...............................  



Friday 9 December 2016

அரும்புகளின் அஞ்சலி

அம்மா அவர்களுக்கு அரும்புகளின் அஞ்சலி 






Tuesday 6 December 2016

கண்ணீர் அஞ்சலி

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாய் தமிழக மக்களுக்கு அமைந்துள்ளது.மீளாத்துயில் கொள்ளும் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறையருள் துணை செய்யட்டும்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் .


தமிழக முதல்வர்

ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
முதல்வரைதேர்தல்குறிப்பு
ஜூன் 24, 1991மே 11, 19961991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 11வது முதல்வர்
மே 14, 2001செப்டம்பர் 21, 2001தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார்இப்பதவி முடக்கப்பட்டது
மார்ச் 2, 2002மே 12, 20062001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 14வது முதல்வர்
மே 16, 2011செப்டம்பர் 27, 20142011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
மே 23, 2015மே 22, 20162015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்தமிழகத்தின் 18வது முதல்வர்
மே 23, 2016டிசம்பர் 5, 20162016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 19வது முதல்வர் 

Friday 25 November 2016

happy birth day

கடந்த 23.11.16புதன்கிழமை நான்காம் வகுப்பு மாணவன் இரா.சாய்ஹரிஷ் 
பிறந்தநாள்.எல்லாவளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் .

Friday 18 November 2016

வ.உ.சிதம்பரம்பிள்ளை நினைவு தினம்

18.11.16  சுதந்திர போராட்ட வீரர் தியாகி என்ற சொல்லுக்கு முழுப்பொருள்  வ.உ.சிதம்பரம்பிள்ளை  அவர்களின்  நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
மாணவர்கள் அஞ்சலி  செலுத்தினர்.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்


மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

Tuesday 15 November 2016

குழந்தைகள்தினம்

எளிமையான விழா ஆனால் சிறப்பான விழா

Friday 11 November 2016

பொம்மலாட்டம்

 நேற்றும் இன்றும் ( 11.11.16  ) தேசிய சின்னங்கள் பற்றியும் ,பூக்களின் அழகிபோட்டி பற்றியும் பொம்மலாட்டம் என்னால் செய்து காட்டப்பட்டது.பின்பு மாணவர்களின்  திறமை வெளிக்கொணரப்பட்டது .






Monday 7 November 2016

மேரிகியூரியின் வாழ்க்கை(Marie Curie)




இன்று மேரிகியூரி பிறந்தநாள் (07.11.1867)
மேரி கியூரி வரலாறு க்கான பட முடிவு மேரி கியூரி வரலாறு க்கான பட முடிவு


 மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.

இவரது சாதனைகளுள் முதன்மையானவை பின்வருமாறு:
  • கதிரியக்கம் ( இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு
  • கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும்
  • இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம்ஆகியனவற்றை கண்டுபிடித்தல். இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் குயூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்று திகழ்கின்றன. முதலாம் உலகப் போரின் போது, இராணுவ துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார்.
ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் , மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா-குயூரி (இவர் இரண்டு குடும்பபெயர்களையும் பயன்படுத்தினார்), தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுதந்தார். மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கவரவிக்கும் வகையில் போலோநியம் என்று பெயரிட்டார்.

கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.

விவசாயம்

நடவு பணி மும்முரம் 
பறவைகள் கூட்டம் 

சர். சி. வி. ராமன்

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவரான சி.வி. ராமனின் பிறந்த தினம் இன்று!        (07.11.1888)


       சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் 07.11.1888 அன்று சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா தம்பதியரின் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். 
 
          பள்ளிப்படிப்பை திருச்சியில் முடித்த அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். 

நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார். பின்னர் 1907 ஆம் ஆண்டு இந்திய நிதித் துறை பணியில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். 1917 தொடங்கி அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. 
லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930 ஆம் ஆண்டு ஒளி சிதறல் பற்றிய ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன். பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது. 
1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் நவம்பர் 21, 1970 அன்று தனது மரணம் வரை பணிபுரிந்தார்.




நன்றி  பாடசாலை

Wednesday 2 November 2016

தீபாவளி


 2016  தீபாவளி புத்தாடையில் பள்ளி மாணவர்கள்.

Wednesday 26 October 2016

வாய்பாடு

அரசால் வழங்கப்பட்ட வாய்பாடுகளை பயன்படுத்தி  வட்டமாக அமர்ந்து பயிற்சி பெரும் மாணவர்கள்.( 26.10.2016)
.

பிறந்தநாள்

எமது பள்ளி மாணவர் இரா.உதயநிதி (நான்காம் வகுப்பு )தனது பிறந்த நாளை (26.10.2016) பள்ளியிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்.

அவர் எல்லா வளமும் பெற 
.அனைவரும் வாழ்த்துகிறோம்



காப்ரேகர்' (Kaprekar)

*படித்ததில் வியந்தது*
▶'காப்ரேகர்' (Kaprekar) என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது.
இவர் ஒரு இந்தியர். மும்பாயின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழுமையான பெயர். இவர் ஒரு கணித மேதை.
மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர்.
டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப்படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள்பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப்பட்டவர்களாகிவிடுகின்றனர்.
காப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers) என்பது கணிதத்தில் பிரபலமானது.
உதாரணமாக, 703 என்பது
ஒரு காப்ரேகர் எண்ணாகும். இதன் விசேசத்தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும். 
சரி இதைப் பாருங்கள்.
703X703=494209 அல்லவா? இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள். 
இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள்.
494+209=703. மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா? எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும்.
இப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும். 
நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்துபாருங்கள்.
ஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப்பற்றியல்ல. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ (Kaprekar’s Constant) என்பதும்தான். 
'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (Sudhakar Kasturi), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார்.
அந்த எண் 6174.
'6174' ஒரு அதிசய எண். இந்த அதிசய எண்ணைக் கண்டுபிடித்தவர் காப்ரேகர். 
'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?' என்றறிய ஆவலாக இருக்கிறதா?
அதைப் பார்க்கலாம் வாருங்கள்……..
காப்ரேகர் சொன்னது இதுதான், "6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். 
பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள். அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்".
அது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண்? பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்கம்வரை வரிசையாக எழுதுவது இறங்குவரிசை எண். சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம்வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண். அவ்வளவுதான். இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467.
காப்ரேகர் சொன்னதுபோல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம்.
7641-1467=6174.
அதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும்.
இத்துடன் முடிந்துவிடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள்.
நான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம். அதை இ.வ.எ, ஏ.வ.எ என மாற்றிக் கழித்துக்கொள்வோம்.
9853-3589=6264
இப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ, ஏ.வ.எ ஆக மாற்றிக் கழித்துக்கொள்வோம்.
6642-2466=4176
இந்த எண்ணுக்கும் அதேபோலச் செய்தால்,
7641-1467=6174
இறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். 
இப்போது 6174 ஐ நாம் வரிசைப்படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும். இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக்கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (Blackhole) என்றும் சொல்வார்கள்.
நீங்கள் 9999 க்குக் கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்களும், சில விதிவிலக்கு எண்களும் இவற்றில் அடங்காது) அதனை இ.வ.எண், ஏ.வ.எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும். முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சிசெய்து பாருங்கள். எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும்.
அதனால்தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள்.
மூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும்.
என்ன புரிகிறதா?