Friday 22 November 2013

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய


போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது. 

முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர...்களை உருவாக்கிக் கொள்ளவும். 

EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும்.

போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். 

பின்பு Windows மெனுவில் Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். 

கீழே ஐந்தாவதாக வரும் create new action என்பதை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய New action க்கு RESIZE எனப் பெயர் கொடுக்கவும்.

பின்பு Record பட்டனை அழுத்தவும்.

பின்பு Image மெனுவில் Image size என்பதை தேர்ந்தெடுக்கவும்.

Constrain Proportions என்பதில் உள்ள டிக்கை எடுத்து விடவும்.

Width,Height,Resolution ஆகியவற்றை 200க்கு செட் செய்து கொள்ளவும்.

பின்பு Save As கொடுத்து EMIS RESIZE என்ற டெஸ்க்டாப் போல்டரில் அதை சேமிக்கவும்.பின்பு Stop playing /recording என்பதை கிளிக் செய்து உங்களுடைய action நிறுத்தவும். 

அவ்வளவுதான் 99 சதவீத வேலையை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்! 

இனிமேல் File மெனுவில் Automate இல் Batch பட்டனை கிளிக் செய்து Action இல் RESIZE என்பதை செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான EMIS போல்டரை செலக்ட் செய்து ஓ.கே கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் அனைத்து படங்களும் EMIS RESIZE என்ற போல்டரில் தேவையான படிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்!
நன்றி:  திரு அசதா .teachertn

Monday 18 November 2013





பிறந்த நாள் என்பது என்ன?,???????????



வாழ்க்கையில் ஒரே ஒரு நாள்,


நீங்கள் அழுதபோது உங்கள்



தாய் சிரித்த நாள்



                               
—டாக்டர் அப்துல் கலாம்

நெத்தியடி





## நெத்தியடி - தவறாமல் படியுங்கள்


»»» தாயை முதியோர் இல்லங்களில்
விடும் ஆண் மகன்களுக்கு இந்த
கதை ஒரு சாட்டை.

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய்,
மனைவி, மற்றும் மகனுடன்
வாழ்ந்து வந்தான். குயவனின்
மனைவிக்கு அவளது மாமியாரைப்
பிடிக்கவில்லை.

அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத்
துணிந்தாள். குயவனை தினமும்
நச்சரித்தாள்.

அவனது அம்மாவை பக்கத்தில்
ஒரு வீட்டில் குடியமர்த்தும்
படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள்
சொன்னதை காதிலேயே போட்டுக்
கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள்.
அவனது அம்மாவிற்குத் தனியாக
இருந்தால் ஒரு குறையும்
வராது என்றும், அவரது சாப்பாட்டுத்
தேவையைத் தான் கவனித்துக்
கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத்
தாங்க முடியவில்லை. அம்மாவைப்
இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில்
குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த
தட்டு ஒன்றைக் கொடுத்து,
வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத்
தட்டை எடுத்து வந்தால் அதில்
உணவு நிரப்பித் தருவதாகவும்,
அதை மாமியார் அவர்
வீட்டுக்கு எடுத்துச்
சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்
என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத்
தோன்றினாலும், தன் மகனுக்காக
வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன
வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப்
போனது அறவே பிடிக்கவில்லை. அவன்
அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம்
பாட்டி வீட்டிற்குச்
சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம்
செய்வதைக் கூர்ந்து கவனிக்க
ஆரம்பித்தான். சில சமயம் குயவன்
வேலை செய்யாத
போது அவனது இயந்திரத்தை மகன்
இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள்
மகனுக்கு அப்பாவைப்
போலவே மண்பாண்டம் செய்ய வந்தது.

மிகச் சிறு வயதிலேயே அவன்
அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.
அவன் முதல் முதலில் தன்
அம்மாவுக்கு அருமையான
தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன்
அம்மாவிடம் கொடுத்த போது அவள்
மகனின் திறமையை நினத்து பெருமைப்
பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள்
செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
தனது சிறிய
மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ
செய்த தட்டு மிக அருமை.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது .
எத்தனையோ பாண்டங்கள் இருக்கும்
போது ஏன் எனக்கு ஒரு தட்டைச்
செய்து தர வேண்டும் என்று உனக்குத்
தோன்றியது?"

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்:
"அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப்
போலக் கல்யாணம் செய்து கொள்வேன்.

அப்போது நீ பாட்டியைப் போல
பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய்
அல்லவா. அப்போது உனக்கு என்
மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க
ஒரு தட்டு வேண்டுமல்லவா!
அதைத்தான் உனக்கு நான்
இப்போது செய்து கொடுத்தேன்"
 ## வாழ்க்கை ஒரு வட்டம்.
 இன்று நீ பிறக்கு செய்வதை நாளை பிறர்   உனக்கு செய்வர்

|L|ewis...
 — Sellakannu Jayarajah மற்றும் 3 பிறர்பேர்களுடன்




புகைப்படம்: ## நெத்தியடி - தவறாமல் படியுங்கள்
»»» தாயை முதியோர் இல்லங்களில்
விடும் ஆண் மகன்களுக்கு இந்த
கதை ஒரு சாட்டை.

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய்,
மனைவி, மற்றும் மகனுடன்
வாழ்ந்து வந்தான். குயவனின்
மனைவிக்கு அவளது மாமியாரைப்
பிடிக்கவில்லை.

அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத்
துணிந்தாள். குயவனை தினமும்
நச்சரித்தாள்.

அவனது அம்மாவை பக்கத்தில்
ஒரு வீட்டில் குடியமர்த்தும்
படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள்
சொன்னதை காதிலேயே போட்டுக்
கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள்.
அவனது அம்மாவிற்குத் தனியாக
இருந்தால் ஒரு குறையும்
வராது என்றும், அவரது சாப்பாட்டுத்
தேவையைத் தான் கவனித்துக்
கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத்
தாங்க முடியவில்லை. அம்மாவைப்
இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில்
குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த
தட்டு ஒன்றைக் கொடுத்து,
வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத்
தட்டை எடுத்து வந்தால் அதில்
உணவு நிரப்பித் தருவதாகவும்,
அதை மாமியார் அவர்
வீட்டுக்கு எடுத்துச்
சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்
என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத்
தோன்றினாலும், தன் மகனுக்காக
வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன
வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப்
போனது அறவே பிடிக்கவில்லை. அவன்
அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம்
பாட்டி வீட்டிற்குச்
சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம்
செய்வதைக் கூர்ந்து கவனிக்க
ஆரம்பித்தான். சில சமயம் குயவன்
வேலை செய்யாத
போது அவனது இயந்திரத்தை மகன்
இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள்
மகனுக்கு அப்பாவைப்
போலவே மண்பாண்டம் செய்ய வந்தது.

மிகச் சிறு வயதிலேயே அவன்
அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.
அவன் முதல் முதலில் தன்
அம்மாவுக்கு அருமையான
தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன்
அம்மாவிடம் கொடுத்த போது அவள்
மகனின் திறமையை நினத்து பெருமைப்
பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள்
செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
தனது சிறிய
மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ
செய்த தட்டு மிக அருமை.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது .
எத்தனையோ பாண்டங்கள் இருக்கும்
போது ஏன் எனக்கு ஒரு தட்டைச்
செய்து தர வேண்டும் என்று உனக்குத்
தோன்றியது?"

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்:
"அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப்
போலக் கல்யாணம் செய்து கொள்வேன்.

அப்போது நீ பாட்டியைப் போல
பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய்
அல்லவா. அப்போது உனக்கு என்
மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க
ஒரு தட்டு வேண்டுமல்லவா!
அதைத்தான் உனக்கு நான்
இப்போது செய்து கொடுத்தேன்" ## வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறக்கு செய்வதை நாளை பிறர்
உனக்கு செய்வர்
-எண்ண சிதறல்கள்

|L|ewis...


















சீனர்களின் கைவேலைப்பாடு மிக்க அந்த பேழையில் பட்டு துணி சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். இன்று வரை யாரும் அதை திறந்து பார்த்ததில்லை.

குரு மட்டுமே அதை கையில் சில நேரம் வைத்திருந்து நான் பார்த்திருக்கிறேன். நான் அவரின் பிரதான சிஷ்யன் என்பதால் எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.  இங்கே இருக்கும் பலருக்கு இதுவும் கிடைத்ததில்லை.

குரு பிறருக்கு காட்டாமல் பொத்தி வைத்திருக்கும் அந்த புனித நூலில் இருக்கும் தேவ ரகசியம் என்ன என தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

எத்தனை நாள் தான் அதற்கு பூஜைகள் மட்டும் செய்து கொண்டிருப்பது? நானும் அதை படித்து ஆன்மீகத்தில் உயர வேண்டாமா? இந்த வேட்கை என்னை பல்வேறு வகையில்` தூண்டியது.

அன்று இரவு அப்புத்தகத்தை திறந்துபார்க்கும் திட்டம் உருவாகியது. குருவை அவரின் அறையில் சந்தித்து பூஜை அறையை தூய்மையாக்க போகிறேன் என சொல்லிவிட்டு தனியாக வந்துவிட்டேன்.

இதோ அறைக்கதவை சாத்தி தாழ்போட்டாகிவிட்டது.யாரும் உள்ளே வரவோ நடப்பதை பார்க்கவோ முடியாது.

நறுமணம் கமழும் அந்த பெட்டியை மெல்ல திறந்து பட்டுத்துணியை விலக்கி அந்த புனித நூலை எடுத்தேன்.

அப்புத்தகத்தின் அட்டைப்படம் தாண்டி உள்ளே இருக்கும் தேவரகசியத்தை ஒரே மூச்சில் பருகும் ஆவலில் திறந்தால்....அனைத்தும் வெற்றுக்காகிதமாக இருந்தது...!

புனித நூல் ஏன் வெற்று தாளாக இருக்கிறது? இதை ஏன் வைத்து வழிபட வேண்டும் என பல குழப்பம் தோன்றியது...

மெல்ல திரும்பினால்...

பூட்டிய அறைக்குள் குரு நின்று என்னை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியில் உச்சத்துக்கே சென்று அவர் காலில் விழுந்தேன். தேம்பி அழுதுக்கொண்டு என் கண்ணீரால் அவரின் கால்களை கழுவும் என்னை தோள்களை பிடித்து தூக்கினார்.

“புனித நூல் என்றவுடன் அதில் பல தெய்வீக கருத்துக்கள் இருக்கும் என நினைத்தாயா? இறை கருத்துக்கள் என்பது ஒரு மொழியில் அடங்கக் கூடியது அல்ல. இறைகருத்துக்கள் வார்த்தையால் உணரக்கூடியது அல்ல.. இறைவன் என்ற பிரம்மாண்டம் சில வார்த்தையால் விளக்கிவிட முடியுமா என்ன? இறைக்கருத்துகள் மெளனத்தால் பகிர வேண்டியவை...