Friday 25 November 2016

happy birth day

கடந்த 23.11.16புதன்கிழமை நான்காம் வகுப்பு மாணவன் இரா.சாய்ஹரிஷ் 
பிறந்தநாள்.எல்லாவளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் .

Friday 18 November 2016

வ.உ.சிதம்பரம்பிள்ளை நினைவு தினம்

18.11.16  சுதந்திர போராட்ட வீரர் தியாகி என்ற சொல்லுக்கு முழுப்பொருள்  வ.உ.சிதம்பரம்பிள்ளை  அவர்களின்  நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
மாணவர்கள் அஞ்சலி  செலுத்தினர்.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்


மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

Tuesday 15 November 2016

குழந்தைகள்தினம்

எளிமையான விழா ஆனால் சிறப்பான விழா

Friday 11 November 2016

பொம்மலாட்டம்

 நேற்றும் இன்றும் ( 11.11.16  ) தேசிய சின்னங்கள் பற்றியும் ,பூக்களின் அழகிபோட்டி பற்றியும் பொம்மலாட்டம் என்னால் செய்து காட்டப்பட்டது.பின்பு மாணவர்களின்  திறமை வெளிக்கொணரப்பட்டது .






Monday 7 November 2016

மேரிகியூரியின் வாழ்க்கை(Marie Curie)




இன்று மேரிகியூரி பிறந்தநாள் (07.11.1867)
மேரி கியூரி வரலாறு க்கான பட முடிவு மேரி கியூரி வரலாறு க்கான பட முடிவு


 மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.

இவரது சாதனைகளுள் முதன்மையானவை பின்வருமாறு:
  • கதிரியக்கம் ( இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு
  • கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும்
  • இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம்ஆகியனவற்றை கண்டுபிடித்தல். இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் குயூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்று திகழ்கின்றன. முதலாம் உலகப் போரின் போது, இராணுவ துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார்.
ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் , மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா-குயூரி (இவர் இரண்டு குடும்பபெயர்களையும் பயன்படுத்தினார்), தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுதந்தார். மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கவரவிக்கும் வகையில் போலோநியம் என்று பெயரிட்டார்.

கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.

விவசாயம்

நடவு பணி மும்முரம் 
பறவைகள் கூட்டம் 

சர். சி. வி. ராமன்

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவரான சி.வி. ராமனின் பிறந்த தினம் இன்று!        (07.11.1888)


       சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் 07.11.1888 அன்று சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா தம்பதியரின் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். 
 
          பள்ளிப்படிப்பை திருச்சியில் முடித்த அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். 

நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார். பின்னர் 1907 ஆம் ஆண்டு இந்திய நிதித் துறை பணியில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். 1917 தொடங்கி அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. 
லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930 ஆம் ஆண்டு ஒளி சிதறல் பற்றிய ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன். பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது. 
1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் நவம்பர் 21, 1970 அன்று தனது மரணம் வரை பணிபுரிந்தார்.




நன்றி  பாடசாலை

Wednesday 2 November 2016

தீபாவளி


 2016  தீபாவளி புத்தாடையில் பள்ளி மாணவர்கள்.