Tuesday 16 May 2017

உயர் பதவிகள்

நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு  தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-

1. IAS - Indian Administrative Service

2. IPS - Indian Police Service

3. IFS - Indian Foreign Service

4. IFS - Indian Forest Service


5. IRS - Indian Revenue Service (Income Tax )

6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )

7. IAAS - Indian Audit and Accounts Service

8. ICAS - Indian Civil Accounts Service

9. ICLS - Indian Corporate Law Service

10. IDAS - Indian Defence Accounts Service

11. IDES - Indian Defence Estate Service

12. IIS - Indian Information Service

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service

14. IPS  - Indian Postal Service

15] IRAS - Indian Railway Accounts Service

16. IRPS - Indian Railway Personal Service

17. IRTS - Indian Railway Traffics Service

18. ITS - Indian Trade Service

19. IRPFS - Indian Railway Protection Force Service

இத்தனை பதவிகளும்  தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.

இவை அனைத்துக்கும்  தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும்  முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை.

நம் தமிழக இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரே ஒரு  பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்சி தான் முக்கியம்.



நன்றி  பாடசாலை 

Saturday 6 May 2017

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு



 தற்போது புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று இங்கு பார்ப்போம்.
 


www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பயனர் நுழைவு பகுதிக்குச் சென்று, பதிவுசெய்யப்பட்ட பயனாளர் என்ற இடத்தில் உங்களது கார்டுக்கு நீங்கள் அளித்த மொபைல் எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை அனுப்பு என்ற தெரிவை தேர்வு செய்யவும்.
 
கடவுச்சொல் பெறும் முறை :
 
❁ நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிற்கு 7 இலக்க எண் குறுந்தகவலாக வருவதை அங்கீகாரம் என்ற இடத்தில் உள்ளிட்டுப் பதிவுசெய் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அதிகபட்ச நேரம் 300 வினாடிகள் வரை எடுக்கும். ஒரு வேலை உங்களுக்குக் கடவுச்சொல் வரவில்லை என்றால் 1967 or 18004255901 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.
 
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை கண்டறிவது எப்படி?
 
❁ கடவுச்சொல்லை உள்ளிட்டு உள் சென்ற பிறகு ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்பதைத் தேர்வு செய்த பிறகு உங்களது ஸ்மார்ட் கார்டின் விவரங்கள் அனைத்தையும் காண முடியும். அதில் வலது பக்கத்தில் என்எப்எஸ்எ அட்டை வகை என்று குறியிடப்பட்டு இருக்கும். அங்கு உங்களது அட்டை வகை என்ன என்பதை நீங்கள் கண்டறிய முடியும். அங்கு காண்பிக்கப்படும் அட்டை வகைகளின் விளக்கம் என்னவென்று நாம் அடுத்துப் பார்ப்போம்.
 
குறியீட்டின் வகைகள் :
 
PHHRICE : அரசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும்.
 
PHAA:35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
 
NPHH:  அல்லது NPHH-L என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
 
NPHHS : சர்க்கரை மட்டும் கிடைக்கும்.
 
NPHHNC : எந்தப் பொருட்களும் கிடையாது. ஒரு அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை எவ்வாறு பிரிக்கப்பட்டது :
 
❁ ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை அனைத்தும் டிஎன்பிடிஎஸ் அதிகாரிகள் மூலமாக நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து முடிவு செய்யப்படுகின்றது.
 
குறிப்பு :
 
❁ இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது அரசு உதவி மையம் எண்கள் 1967 or 18004255901-ஐ தொடர்பு கொள்ளலாம்.



நன்றி  பாடசாலை