Tuesday 7 March 2017

தகுதித்தேர்வு விண்ணப்பம்! பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்

    தகுதித்தேர்வு விண்ணப்பம்! பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்

         நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. 
       தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்ற தகவலை ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் trb.tn.nic.in பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

50 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட பள்ளியில் வழங்க வேண்டும்.

விண்ணப்பத்தில் எந்தக் கல்வி மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணமாக 250 ரூபாயும், பிற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விண்ணப்பத்தில் இணைப்புத்தாள் (சலான்) இருக்கும். தேர்வுக்கான கட்டணத்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கியில் செலுத்தி சலான் சீட்டினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான கட்டத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை மடிக்கக்கூடாது. தபால் வழியாக அனுப்பாமல் நேரடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சேரும் வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் போன்றவற்றை நினைவில் கொள்ளவும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1-ல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இந்த ஆண்டு பட்டயப்படிப்பிற்கான தேர்வினை முடிக்க உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பார்வைத் திறன் குறைந்தோர் முதல் தாள் விண்ணப்பிக்க முடியாது. இரண்டாவது தாளை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து அதன் பின்பு பி.எட் படித்து முடித்தவர்கள் எழுதலாம். தற்போது பி.எட் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு தாளுக்கான தேர்வினையும் எழுத இருப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தாள் 1 குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரத் தேர்வாகவும், 150 கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் இருக்கும்.

மூன்று வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கவில்லை என்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இன்னும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 4000த்துக்கு மேற்பட்ட காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 3000 பணியிடங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் ஐந்நூறு பணியிடங்கள் மட்டுமே காலியிடங்களாக இருக்கின்றன என்ற தகவலும் இருக்கிறது. ஆனால், ஒரு முறை தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அதனடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் என்பதால் 90 மதிப்பெண்ணைப் பெற வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு நாளுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் மிகுந்த திட்டமிட்டுப் படிப்பது அவசியம்.

வாழ்த்துகள் ஆசிரியர்களே!
நன்றி  :பாடசாலை - ஞா. சக்திவேல் முருகன்

இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே


இழப்பதற்கு எதுவுமில்லை   நமது கையிலே ,
தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் 



Friday 3 March 2017

அதிசய வீடியோ


உலகிலேயே  மிக நீளமான (10 கிலோ மீட்டர் ) ரயில் காணவேண்டுமா ? கிளிக்குக இந்த லிங்கை.
https://www.facebook.com/856933037750551/videos/1006321202811733/

நடக்கும் மீன் காண
https://www.facebook.com/techinsider/videos/507673936097634/

கிரகங்களின் ஒலி கேட்க
https://www.facebook.com/ScienceNaturePage/videos/862171497248443/

குழந்தைகளை லேசாக எடைபோடாதீர்கள்.
https://www.facebook.com/Kadhambam/videos/1135568796502557/