Friday 28 February 2014

தேசிய அறிவியல் தினம்




இன்று (28.02.2014) தேசிய அறிவியல்  தினம் . 

இன்றுடன் எங்கள்  பள்ளிக்கான இணையதளம் 

ஆரம்பித்து  ஒருவருடம் முடிந்து  இரண்டாம் 

ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆதரவு

அளித்து வரும் அனைவருக்கும்  நன்றி. 



தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல்என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.





Thursday 27 February 2014

குடிநீர் பாதுகாப்பு வாரம்


 எங்கள்  பள்ளியில் குடிநீர் பாதுகாப்பு வாரம் 
கொண்டாடப்பட்டது .
பள்ளி உதவியாசிரியர்  திரு த. இரவி அவர்கள்  கிராமத்தின் குடிநீர் ஆதாரங்களில்  இருந்து  எடுக்கப்பட்ட  நீரில்  12 விதமான  பரிசோதனைகளை  செய்து  நீரின் தன்மையை  ஆராய்ந்து  கூறினார் . எம் பள்ளியின் குடிநீர்  தரமானது  என்று சான்று அளித்தார் . பரிசோதனையின் போது 
திருத்தங்கூர்  மருத்துவர்  திரு தியாகராஜ்  அவர்கள் பார்வை   இட்டார்.










மருத்துவமுகாம் 27.02.2014


இன்று எம் பள்ளியில்  திருத்தங்கூர்  ஆரம்ப சுகாதார    நிலைய      மருத்துவமனை      மருத்துவர் 
திரு தியாகராஜ்  அவர்களின்  சீரிய தலைமையில் மாணவர்களுக்கான  மருத்துவமுகாம்  நடை பெற்றது. அனைத்து   மாணவர்களுக்கும் பரிசோதனை  செய்யப்பட்டு  மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 
DR  THIYAGARAJ  MBBS 



Wednesday 19 February 2014

தமிழ்த்தாத்தா பிறந்தநாள் (19.02.1885)



Dr U V Swaminatha Iyer stamp.jpg

‘தமிழ் தாத்தா’ என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில்
இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்
 பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாத ஐயரும்
 குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப் பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும்,
 செழுமையையும் உலகிற்கு அறியச் செய்தவர். உ.வே.சா 90-க்கும் மேற்பட்ட
 புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும்
 கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார்
. சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து,
 பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு
 உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப்பணியானது அவர் தனது
84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட
 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில்
இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை
 போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். உ.வே.சா.
 கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத்
 தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி
 மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு
 முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும்
தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு பெப்ரவரி 18, 2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல்
 தலை வெளியிட்டுள்ளது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம்
 தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942-ல்
 இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல்
நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அச்சு பதித்த நூல்களின் பட்டியல்


              சீவகசிந்தாமணிமணிமேகலைசிலப்பதிகாரம்புறநானூறுதிருமுருகாற்றுப்படை,
பத்துப்பாட்டு,பொருநராற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி,நெடுநல்வாடைகுறிஞ்சிப் பாட்டுபட்டினப் பாலைமலைபடுகடாம், 12 புராணங்கள்பெருங்கதை, 9 உலாநூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4[3]
உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்கள்[4]
புத்தகத்தின் பெயர்பதிப்பித்த ஆண்டு
நீலி இரட்டை மணிமாலை1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு1878
திருக்குடந்தைப் புராணம்1883
மத்தியார்ச்சுன மான்மியம்1885
சீவக சிந்தாமணி1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது1888
திருமயிலைத் திரிபந்தாதி1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும்1889
தண்டபாணி விருத்தம்1891
சிலப்பதிகாரம்1892
திருப்பெருந்துறைப் புராணம்1892
புறநானூறு1894
புறப்பொருள் வெண்பா மாலை1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்1898
மணிமேகலை1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம்1898
ஐங்குறு நூறு1903
சீகாழிக் கோவை1903
திருவாவடுதுறைக் கோவை1903
வீரவனப் புராணம்1903
சூரைமாநகர்ப் புராணம்1904
திருக்காளத்தி நாதருலா1904
திருப்பூவண நாதருலா1904
பதிற்றுப் பத்து1904
திருவாரூர்த் தியாகராச லீலை1905
திருவாரூருலா1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்1906
தனியூர்ப் புராணம்1907
தேவையுலா1907
மண்ணிப்படிக்கரைப் புராணம்1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு1910
திருக்காளத்திப் புராணம்1912
திருத்தணிகைத் திருவிருத்தம்1914
பரிபாடல்1918
உதயணன் சரித்திரச் சுருக்கம்1924
பெருங்கதை1924
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை1925
நன்னூல் மயிலை நாதருரை1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்1928
தக்கயாகப் பரணி1930
தமிழ்விடு தூது1930
பத்துப் பாட்டு மூலம்1931
மதுரைச் சொக்கநாதர் உலா1931
கடம்பர் கோயிலுலா1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது1932
பழனி பிள்ளைத் தமிழ்1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை1932
வலிவல மும்மணிக் கோவை1932
சங்கரலிங்க உலா1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா1933
பாசவதைப் பரணி1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 11933
சங்கர நயினார் கோயிலந்தாதி1934
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 21934
விளத்தொட்டிப் புராணம்1934
ஆற்றூர்ப் புராணம்1935
உதயண குமார காவியம்1935
கலைசைக் கோவை1935
திரு இலஞ்சி முருகன் உலா1935
பழமலைக் கோவை1935
பழனி இரட்டைமணி மாலை1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை1936
கனம் கிருஷ்ணயைர்1936
கோபால கிருஷ்ண பாரதியார்1936
திருநீலகண்டனார் சரித்திரம்1936
திருமயிலை யமக அந்தாதி1936
திருவள்ளுவரும் திருக்குறளும்1936
நான் கண்டதும் கேட்டதும்1936
புதியதும் பழையதும்1936
புறநானூறு மூலம்1936
பெருங்கதை மூலம்1936
மகாவைத்தியநாதையைர்1936
மான் விடு தூது1936
குறுந்தொகை1937
சிராமலைக் கோவை1937
தமிழ்நெறி விளக்கம்1937
திருவாரூர்க் கோவை1937
நல்லுரைக் கோவை பகுதி 11937
நல்லுரைக் கோவை பகுதி 21937
நினைவு மஞ்சரி - பகுதி 11937
அழகர் கிள்ளை விடு தூது1938
சிவசிவ வெண்பா1938
திருக்கழுக்குன்றத்துலா1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை1938
திருமலையாண்டவர் குறவஞ்சி1938
நல்லுரைக் கோவை பகுதி 31938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு1939
தணிகாசல புராணம்1939
நல்லுரைக் கோவை பகுதி 41939
புகையிலை விடு தூது1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம்1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா1940
வில்லைப் புராணம்1940
செவ்வைச் சூடுவார் பாகவதம்1941
நினைவு மஞ்சரி - பகுதி 21942
வித்துவான் தியாகராச செட்டியார்1942

Tuesday 18 February 2014

சிறப்பு பார்வை

17.02.2014
ஆசிரிய பயிற்றுனர் திருமதி பாபி அவர்களும்  
 IED சிறப்பு ஆசிரியை ஆரோக்கிய விஜய ராணி அவர்களும்  
IED சிறப்பு ஆசிரியர் திரு ப .ஜானகிராமன்அவர்களும்  பள்ளியை 
பார்வை இட்டனர்