Tuesday 30 December 2014

பாரத ரத்னா

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் முறையே "பாரத ரத்னா' விருது பெறும் 44 மற்றும் 45ஆவது நபர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு, விஞ்ஞானி சி.என். ராவ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் "பாரத ரத்னா' விருது பெற்றனர்.
இதுபோல், "பாரத ரத்னா' விருது பெற்ற மற்றவர்களின் பெயர், ஆண்டு விவரம் வருமாறு:
1) சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954
2) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954
3) சி.வி. ராமன் - 1954
4) பகவன் தாஸ் - 1955
5) விஸ்வேஸ்வரய்யா - 1955
6) ஜவாஹர்லால் நேரு - 1955
7) கோவிந்த வல்லப பந்த் - 1957
8) தோண்டோ கேசவ் கார்வே - 1958
9) பிதான் சந்திர ராய் - 1961
10) புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961
11) ராஜேந்திர பிரசாத் - 1962
12) ஜாகிர் ஹுசேன் - 1963
13) பாண்டுரங்க் வாமன் கனே - 1963
14) லால் பகதூர் சாஸ்திரி - 1966
15) இந்திரா காந்தி - 1971
16) வி.வி. கிரி - 1975
17) கே. காமராஜ் - 1976
18) அன்னை தெரசா - 1980
19) ஆச்சார்ய வினோபா பாவே - 1983
20) கான் அப்துல் கஃபார் கான் - 1987
21) எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988
22) பி.ஆர். அம்பேத்கர் - 1990
23) நெல்சன் மண்டேலா - 1990
24) ராஜீவ் காந்தி - 1991
25) வல்லபபாய் படேல் - 1991
26) மொரார்ஜி தேசாய் - 1991
27) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992
28) ஜே.ஆர்.டி. டாடா - 1992
29) சத்யஜித் ராய் - 1992
30) குல்ஜாரிலால் நந்தா - 1997
31) அருணா ஆசப் அலி - 1997
32) ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997
33) எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998
34) சிதம்பரம் சுப்ரமணியம் - 1998
35) ஜெயபிரகாஷ் நாராயண் - 1999
36) அமர்த்தியா சென் - 1999
37) கோபிநாத் போர்தோலோய் - 1999
38) பண்டிட் ரவிசங்கர் - 1999
39) லதா மங்கேஷ்கர் - 2001
40) உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001
41) பீம்சேன் ஜோஷி - 2009
42) சி.என்.ஆர். ராவ் - 2014
43) சச்சின் டெண்டுல்கர் - 2014

Saturday 13 December 2014

மருத்துவ முகாம்

 
11.12.2014 அன்று

எம் பள்ளியில்  திருத்தங்கூர்  ஆரம்ப சுகாதார    நிலைய     மருத்துவமனை      மருத்துவர்  திரு தியாகராஜ்  அவர்களின் சீரிய தலைமையில் மாணவர்களுக்கான  மருத்துவமுகாம்  நடை பெற்றது. அனைத்து   மாணவர்களுக்கும் பரிசோதனை  செய்யப்பட்டு மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 


சத்துணவை  பார்வையிடல்

கழிப்பறை சுத்தமாக உள்ளதா என பார்வை


மருத்துவக்குழு

Thursday 11 December 2014

பாரதியார் பற்றிய பாடல் !
"ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி "என்ற பாடல் மெட்டு !
பாரதியார் பிறந்த நாளில் பள்ளிகளில் பாடலாம்
பல்லவி
பார் பார் பார் எங்கள் பாரதியை

கார் கார் முகிலென கவி பொழிந்தார்

நிமிர் நிமிர் நிமிர் என்றார் பெண்ணினத்தை !

பின்பற்றுவோம் என்றும் அவர் கருத்தை !
சரணம் 1
கண்ணன் பாஞ்சாலி பாட்டுரைத்தார்

கார்த்திகை மாதத்தில் கண் விழித்தார்

எட்டையபுரத்தில் அவதரித்து

எட்டுத் திக்கும் புகழ் கொண்டார் !
சரணம் 2
அவர் தான் அறிவுக்கண் திறந்து வைத்தார்

அவர் போல் பலரும் முயன்றுரைத்தார்

முண்டாசு கவிஞர் பாரதி போல்

முயல்வோம் நாமும் நலம் பெறவே !

நன்றி: திருமதி.D.விஜயலட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

Monday 1 December 2014

பல் பரிசோதனை




இன்று (01.12.2014)பல் மருத்துவர் செல்வி  மீரா அவர்களின் தலைமையில்   மாணவர்களுக்கான பல் பரிசோதனை திட்டத்தின் கீழ்  எமது பள்ளி  மாணவர்களுக்கு  அனைவருக்கும்  பல் பரிசோதனை  நடந்தது.  பத்து மாணவர்களுக்கு  பல் அடைத்தல் செய்யப்பட்டது.