சிறுகதைகள்


ஒரு செல்வந்தர் இருந்தார். சிறந்த பக்திமான்.
ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை
ஒன்றை தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவனிடம் கொடுத்து
அருகில் உள்ள கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

அந்த சிறுவன் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலையிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.
அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.

கனவில் இறைவன் வந்து நீ எனக்குக் கொடுத்த இரண்டு
பழங்களை நான் விரும்பி சாப்பிட்டேன்; ருசியாக இருந்தது என்றார்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலை பழம்
கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச்
சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டார்.

மறு நாள் காலை அந்தச் சிறுவனை கூப்பிட்டு அந்த வாழைக்குலையில் எத்தனை பழத்தை கோவிலில் கொடுத்தாய் என்று கேட்டு மிரட்டினார்.

சிறுவன் பயத்தில் நான் பசியாக இருந்ததால் 2 பழங்களை சாப்பிட்டு விட்டு மீதியை தான் கோவிலில் கொடுத்ததாக உண்மையை ஒப்புக்கொண்டான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது.

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!



..................................................;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;.................................................. 



வேலைக்காரியின் விடுகதை
அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள். 
"""அம்மா! கம்பர் இருக்கிறாரா?''
""இருக்கிறார். பல புலவர்கள் அவரைக் காண வந்துள்ளனர். அவர்கள் அவரிடம் தமிழின்பம் நுகர்ந்து கொண்டுள்ளனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர்,'' என்று பதில்களை அடுக்கினாள்.
""இருக்கிறாரா' என்று கேட்டால் "ஆம்' அல்லது "இல்லை' என்று சொல்லியிருக்கலாம். வாயாடி... எத்தனை பதில் சொல்கிறாள்' என்று அவர் அசைபோட்டார்.
""நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா?''
"""ஆங்...அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி..சரி...எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுமேன்'' என்றாள்.
புலவர் ஆர்வமானார்.
""வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் "சிவசிவ' என்பர். அது என்ன?'' என்றாள்.
புலவர் விழிக்கவே, ""ஒருநாள் யோசித்து சொல்லுமேன்,'' என்றவள் விடுவிடுவென போய்விட்டாள்.
கம்பர் வீட்டு வேலைக்காரியிடம் மாட்டினால் சும்மாவா?
இதற்குள் கம்பர் வெளியே வந்து, புலவரை அழைத்துச் சென்றார். அவரிடம் வாயாடிப்பெண் கேட்ட கேள்வியைத் தெரிந்து கொண்டார்.
"""அது ஒன்றுமில்லை , புலவரே! அவள் தட்டும் வரட்டியைத் தான் அப்படி சொன்னாள். வட்டமாக இருக்கும் வரட்டியை "வன்னி' என்னும் நெருப்பில் சுடுவார்கள். சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு. அதை நெற்றியில் பூசும்போது "சிவசிவ' என்பார்கள் இல்லையா! அதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறாள்,'' என்றார்.
கம்பரின் வேலைக்காரிக்கே இவ்வளவு திறனா என்று அம்பலசோமாசி ஆச்சரியப்பட்டார்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;



;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


5 கோழி
ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு..... முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்.

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்....முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்.

ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: ? ? ?

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


சாவி
‘சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.

ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?

அதற்கு சாவி சொன்னது. நீ என்னை விட பலசாலிதான்.

அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.

ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

வெற்றியின் ரகசியம் 

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். 

முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. 

தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்

. “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள்.

என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்”.

வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை.

மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!”

வெற்றியின் ரகசியம் வெளிப்பட்டது அன்று
999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
 அடையாள அட்டை


தேசிய நெடுஞ்சாலைப் பணியாளர் ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.

"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.
"நான் நெடுஞ்சாலைத் துறைப் பணியாள். எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.

"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.

வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால், முரட்டுக்காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார். தன்னைக் காப்பாற்றும்படி அலறிய பணியாளரிடம் விவசாயி சொன்னார்:

"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


 விதை

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் வாசு வும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் வாசுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.வாசு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

வாசுவும் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும் அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.வாசு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

வாசு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி வாசுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி வாசுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு வாசு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.வாசுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.வாசு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111




 நிர்வாண உண்மை 


ஒரு நாள் உண்மையும் பொய்யும் குளிக்கச் சென்றன
இரண்டும் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கிக் குளித்தன பொய் குளித்துவிட்டு முதலில் கரை ஏறியது அதற்கு விஷமத்தனமான ஓர் எண்ணம் தோன்றியது
பொய் உண்மையின் ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு போய்விட்டது 
உண்மை குளித்துவிட்டுக் கரைக்கு வந்து பார்த்தபோது அதனுடைய ஆடையை காணவில்லை
அங்கே பொய்யின் ஆடைதான் இருந்தந்து
உண்மைக்கு பொய்யின் ஆடையை அணிய விருப்பமில்லை
எனவே உண்மை நிர்வாணமாகப் புறப்பட்டு விட்டது
பொய்யிடம் மறைக்க வேண்டியது இருந்தது எனவே அதற்க்கு ஆடை தேவை
உண்மையிடம் மறைக்கவேண்டியது எதுவுமில்லை அகவே ஆடைகள் தேவையின்றி உண்மை நிர்வாணமானது
 
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666

அலெக்சாண்டர்

சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர்தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...

1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்..

2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்...

3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்....

இப்படி 3 வேண்டுகோள்களையும் விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான் ..

1) எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..

2) இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும்அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் ...கூட வராது..

3) மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும்செத்தபின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும் 

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

மரம்  ஆனால்   வரம்

இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்.. (முழுவதுமாகப் படிக்கவும்)

சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான். அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும்" என்றான்.

மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது"

சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான். அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம்" வா, வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது. மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு, மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.

# நீதி : கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.
77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777
தத்துவம் உயிரைக் காப்பாத்தாது..

ஒரு தத்துவ ஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து,

"உனக்குப் பூகோளம் தெரீயுமா?" என்று கேட்டார்.

"எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும் -

பூகோளம் எல்லாம் தெரியாது" என்றான் படகுக்காரன்.

வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால்,

அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம்

என்றார் தத்துவ ஞானி.

சற்றுத் துரம் போனவுடன்,

"சரித்திரம் தெரியுமா" என்று கேட்டார்.

" அதுவும் எனக்குத் தெரியாது" என்றான் படகுக்காரன்.

"அரை ரூபாயை இழந்துவிட்டாய்" என்றார் அவர்.

பிறகு அவனைப் பார்த்து,

"விஞ்ஞானம் தெரியுமா?" எனக் கேட்டார்.

"அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா,

எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்"

என்றான் படகுக்காரன்.

"முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்" என்றார் அவர்.

அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது..

"சாமி,

உங்களுக்கு நீந்தத் தெரியுமா?" என்று

படகுக்காரன் கேட்டான்.

"தெரியாது" என்றார் அந்த தத்துவ ஞானி .

"இப்பொழுது முழு ரூபாயையும் அல்லவா நீங்கள்,

இழக்கப் போகிறீர்கள்",

எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்து கரை சேர்ந்தான்.

தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால்

நீரில் மூழ்கி உயிர் துறந்தார்..
00000000000000000000000000000000000000000000000000000000000000௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦ 00000000000000
கண்ணாடி

 நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் . "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

கதையின் நீதி -நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

உயிர்



ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.

அவரைப் பார்த்து,

"குருவே! நான் பெரும் ஏழை. 

என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.

நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.

அதற்கு குரு அவனிடம்,

"நான் 5000 தருகிறேன், உன் கைகளை

என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.

அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.

"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,

உன் கால்களை கொடு" என்றார்.

அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.

"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன்,

உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.

அதற்கும் அவன் முடியாது என்றான்.

உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,

உன் உயிரைக் கொடு என்றார்.

அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள்

சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.

அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,

"உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.
 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
               
ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனுக்கு மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்க முடியும்.

'உனக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தெரியுமா?'

8848 மீட்டர் எவரெஸ்ட்டின் உயரம் என சாதாரனமாக சொல்லி கொடுத்திருந்தால் அப்போதே மறந்திருப்பேன்! ஆனால் இப்போதுவரை என் நினைவில் இருப்பது 
'எட்டு  8  எட்டா 8  போனா நாலு எட்டுல 8 எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்!' என்பது மட்டுமே. 
...........................................................................................................................

நையாண்டி 
நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம்.
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே,  முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!
இதில் முதல் வரியில் வரும் “ எட்டேகால்“ என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.
அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4  என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ
அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா?
அடுத்த வரி, எமனேறும் பரியே - எருமை மாடே
3-வது வரி 'மட்டில் பெரியம்மை வாகனமே'  மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே
'முட்டமேல் கூரையில்லா வீடே'  மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே
'குலராமன் தூதுவனே' - ராமன் தூதுவனே - அதாவது  குரங்கே
கடைசி சொல்லான ‘ஆரையடா சொன்னாயடா ‘ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.
“ நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! “ என்பது ஒரு பொருள்.
இதில் இப்போது ‘சொன்னாய்‘ என்பதை மட்டும் பிரித்தால்
‘சொன்னாய்‘ = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.
எப்படி இருக்கிறது பாருங்கள், நம் புலவர்களின் நையாண்டி!
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 
சமையல்காரர்
"ஹலோ... ஹலோ.... அப்பாதுரை சமையல்காரர் இருக்காரா? நான் கேசவன் பேசறேன்....."


"சார் சொல்லுங்க நான் அப்பாதுரை தான் பேசறேன்... எப்படி சார் இருக்கீங்க, தம்பிக்கு கல்யாண ஏற்பாடு ஆயிருச்சுங்களா?....."


"ஆமா துரை... கல்யாணம் ஏற்பாடாயி தேதியும் குறிச்சாச்சு... சமையலுக்கு உன் தேதி தான் வேணும்....."


"சார் எந்த தேதின்னு சொல்லுங்க... நம்ம புள்ளைக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? வர்ற ஞாயிறு பிரீ தானே, வீட்டுக்கே வர்றேன். பேசிக்கலாம்....."


"சரி துரை, ஞாயிறு சாயிந்திரமா வந்திரு... தம்பியும் இருப்பான். சமையல் வகைகளை பேசிறலாம்....."


(கேசவன் வீட்டில்)
"வா அப்பாதுரை, உட்காரு... வீட்டுல தங்கச்சி சவுக்கியமா? கடைசி மகளுக்கு கல்யாணம் கூடி வருதா?......"


"இல்லைங்க சார், மொத ரெண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு கரை ஏத்திட்டேன். கடைசி மவ ஆசைப்பட்டான்னு பீஎட் வரை படிக்க வச்சேன். அதனால மாப்பிள்ளையும் அதுக்கேத்த மாதிரி பாக்கனும்ல. வர்ற வரங்களும் பவுன் அதிகமா எதிர்பாக்கறாங்க. என்ன செய்ய?....."


"சரி துரை, கவலைப்படாத.... சீக்கிரம் ஒரு வரன் அமையும்... அந்த ஆண்டவன் இருக்கான்... நம்பிக்கையை விட்டுடாதே....."


"ஆமாங்க சார் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன். நான் வேலை பாக்குற ஆபீசிலும் மொத ரெண்டு பொண்ணுங்களுக்காக லோன் மேல லோன் போட்டுட்டேன். அதனால கொஞ்சம் பணக்கஷ்டம் இருக்கு. இவளும் ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கு போயிட்டு தான் இருக்கா... என்ன சம்பளம் தான் கம்மியா இருக்கு. சரிங்க சார் என் கதையை பேசிட்டு இருக்கோம். நம்ம தம்பி கல்யாண விஷயத்துக்கு வருவோம். சொல்லுங்க சார் என்னென்ன செய்யணும்?......"


"முதல் நாள் நிச்சயதார்த்தம், அதுல இருந்து கல்யாணம் காலை டிபன் முதல் மதியம் சாப்பாடு வரை என்னென்ன செய்யணும்னு இதுல லிஸ்ட் இருக்கு துரை, இதுக்கு மொத்த காண்ட்ராக்ட் எடுத்துக்க. எவளவு செலவு ஆகும்னு கணக்கு போட்டு சொல்லு, அட்வான்ஸா இந்த பணத்தை இப்போ வச்சுக்க......" 


(கல்யாணத்துக்கு மொத்தம் எத்தன நபர்கள் வருவார்கள் என கேட்டு அதற்கான சமையல் சாமான்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு இறுதி சமையல் காண்ட்ராக்ட் கூலியை சொன்னார் துரை)


"ரொம்ப சந்தோஷம் துரை, ஓரளவு ரீசனபில்லா அமௌன்ட் வந்திருக்கு. அதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது. நம்ம வீட்டுக்கு நீ எத்தன விஷேசங்களுக்கு சமையல் செஞ்சிருக்க, எல்லோரும் வாயார புகழ்ந்து தான் பேசுவாங்க. எல்லாமே துரை உன்னைய தான் சேரும்......"


"சார் ரொம்ப புகழாதிங்க, நீங்க, நான் கேட்ட சாமான்களை சரியா வாங்கித் தர்றிங்க. என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா மதிச்சு நடத்தறிங்க. உங்களுக்கு என்னால முடிஞ்சா அளவு செஞ்சு தர்றேன் அவ்வளோதான்......"


(கல்யாணம் சீரும் சிறப்பாக அறுசுவையோடு முடிந்தது. கேசவன் பெருமகிழ்ச்சி அடைந்து துரை கேட்ட தொகையை விட அதிகமாகவே கொடுத்தார்)


(அப்பாதுரை வீட்டில் இரவு...)
"ஊரார் கல்யாணமெல்லாம் சீரும் சிறப்புமா நடக்குது. இந்த மனுசனும் நல்லா ஆக்கிப் போட்டுட்டு வருது. எம் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் கூட மாட்டிங்குதே. அப்பவே சொன்னேன், அடியே படிச்சு கிழிச்சது போதும், வரன் அமையறது கஷ்டமாயிரும்ன்னு. கேட்டியாடி....." 


"அடியே, கண்ணம்மா, ஏண்டி இப்ப இப்படி அவகிட்ட கத்திட்டு இருக்க, சொல்றத என் மூஞ்சிக்கு முன்னாடி சொல்லத்தொலை...."


"ஆமாய்யா... என் ஆத்திரம் எனக்கு, புள்ளைக்கு வர்றவனையேல்லாம் அம்புட்டு நகை வேணும், இவ்வளவு சீர் வேணும்னு வரிசையா பெரிய லிஸ்ட் சொல்றாணுக. நீ வேலை பாக்குற ஆபீசு கவர்மென்ட்னாலும் அந்த கேண்டீன் சமையல் வேலைக்கு உன் சம்பளம் அந்த காலத்துல இருந்து என்னமோ கம்மியா தான் இருக்கு. அதுல மொத ரெண்டை கரையேத்த வாங்கின லோனு போக தெனம் பொழப்பு ஓட்ட மட்டுமே காசு மிஞ்சுது. இவளும் ஸ்கூலுல வேல பார்த்துட்டு கொண்டு வர்ற காச தான் சேத்து வச்சிட்டு வர்றேன். இப்ப விக்கிற விலைவாசிக்கு இன்னும் நாம நெறைய சேக்கணும் இவ கல்யாணத்துக்கு...."


சரிடி, இந்தா பிடி, கேசவன் ஐயா வீட்டு கல்யாணத்துக்கு சமையல் பணம்... வீட்டு செலவுக்கும், மிச்சத்த சேர்த்தும் வச்சுக்க"


(இரவு அப்பாத்துரைக்கு தூக்கம் வரவே இல்லை. பொண்டாட்டி பேசிய பேச்சு திரும்ப திரும்ப அவர் காதில் ஒலித்தது. கவர்மென்ட் வேலையா இருந்தாலும் வரவு கம்மியா இருக்கே எனவும் யோசித்தார். அப்படியே தூங்கிப் போனார்)


அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றார் அப்பாதுரை. அவர் அந்த ஆபிஸ் கேண்டீனில் சமைக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்த சமையலறையில் கேஸ் வெடித்து சிதறியது, அப்பாதுரையும் தீயில் கருகினார். அங்கே இருந்தவர்கள் தீயணைப்பு வண்டிக்கு சொல்லிவிட்டு அப்பாத்துரையை ஒரு வழியாய் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர் குடும்பம் மொத்தமும் ஆஸ்பத்திரிக்கு வந்தது. ஒவ்வொருத்தரும் அவ்வொரு பக்கமாய் அழுத்த வண்ணம் இருந்தார்கள்.


விஷயம் கேள்விப்பட்டு கேசவன் ஓடி வந்தார். அப்பாதுரை குடும்பத்தாரிடம் பேசி விட்டு அப்பாத்துரை கிடத்தியிருந்த படுக்கைக்கு வந்தார். அப்பாத்துரைக்கு தீக்காயம் முழுதும் இருந்ததால் அவரால் யாரையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இருந்தும் தட்டுத்தடுமாறி கேசவனிடம் பேச முயற்சி செய்தார். கேசவனும் காதை அருகில் கொண்டு சென்றார். 


"ஐயா, எம் புள்ளைகள பாத்துக்கங்க. நான் செத்தா கவர்மேன்ட்டுல இருந்து இன்சூரன்ஸ் பணம், அந்த பணம், இந்தப்பணம் என எப்படியும் ரெண்டு மூணு லட்சம் வரும். அதை எப்படியாவது சீக்கிரம் வாங்கி எம்மக கல்யாணத்த நடத்தீருங்க. என்ன மன்னிச்சுக்கங்க ஐயா, சமைக்கும் போது கேஸ் லைனை பிடுங்கி விட்டுட்டேன் ஐயா"... சொல்லிக் கொண்டே அவர் குரல் விம்மி கண் மூடியது.

-முற்றும்-

(மேற்கண்ட கதையின் கரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. கதாபாத்திரங்களும், சம்பவங்களும் சற்றே கற்பனை கலந்தது.)


111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
விவசாயி

முன்னொரு காலத்தில் கோதை கிராமம் என்ற சிற்றூரில் கண்ணப்பன் என்ற விவசாயி இருந்தான். ஒருநாள், அவன் தன் வயலில் ஆழமாக உழுது கொண்டிருக்கும் போது அவனது ஏர் பழுதடைந்துவிட்டது.பழுதடைந்த ஏரை சரி செய்ய வேண்டி, அந்த ஊரைச் சேர்ந்த தச்சரை அணுகினான் கண்ணப்பன். தச்சரோ கண்ணப்பனிடம் ஏரை சரி செய்ய நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார்.உடனே கண்ணப்பன், தச்சரே! நானோ ஏழை விவசாயி, கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த முறை விவசாயத்தில் கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து கடனை அடைத்து விட்டேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. வேண்டுமென்றால் உமக்கு நெல் மணிகளைத் தருகிறேன். நீர் அதனை வாங்கிக் கொண்டு எனது ஏரை சரி செய்து கொடுங்கள்,'' என்று பணிவோடு கேட்டான். கண்ணப்பா! நெல் மணிகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்? உன் ஏரை சரி செய்ய வேண்டுமானால் நூறு ரூபாய் பணம் கொடு. இல்லையென்றால் ஆளைவிடு! என்றார் தச்சர்.அந்த கிராமத்தில் அந்த தச்சரை விட்டால், வேறு தச்சர் இல்லை என்பது கண்ணப்பனுக்கு தெரியும். எப்படியாவது நூறு ரூபாய் கொடுத்து தன் ஏரினை சரி செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான். உடனே தச்சரை நோக்கினான்.ஐயா தச்சரே! நீங்கள் முதலில் ஏரை சரி செய்யுங்கள். நான் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன்!'' என்று கூறியபடி சென்றான் கண்ணப்பன். அவன் எது சொன்னாலும் அதனை உடனே செய்து விடுவான் என்று தச்சருக்குத் தெரியும். எனவே, ஏரை சரி செய்யும் வேலையில் இறங்கினார். அங்கிருந்து சென்ற கண்ணப்பன் அந்த ஊர் பண்ணையார் வீட்டிற்குச் சென்றான்.வா கண்ணப்பா! எதற்காக வந்திருக்கிறாய்? என்று அன்போடு கேட்டார் பண்ணையார்.ஐயா! என்னுடைய ஏரை சரி செய்ய வேண்டும். அதற்கு நூறு ரூபாய் பணம் தேவைப்படுகிறது. உங்களிடம் இருந்து பணம் கடனாக வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். இரண்டொரு நாட்களில் நான் உங்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவேன்!'' என்றான் கண்ணப்பன்.
கண்ணப்பா! நான் உனக்குப் பணம் கடனாகத் தர வேண்டுமானால், என் வீட்டிலிருந்து என்னுடைய அரிசி ஆலைக்கு, ஐம்பது மூட்டை நெல் சுமந்து வரவேண்டும். அப்போதும் நான் உனக்கு கடனாகத்தான் பணம் கொடுப்பேன். அந்தப் பணத்தை நீ எனக்கு திருப்பிக் கொடுத்திட வேண்டும், என்றார் பண்ணையார்.
பண்ணையாரின் வீட்டிலிருந்து அவரின் அரிசி ஆலைக்குச் செல்ல ஒரு கி.மீ., தூரம் இருக்கும். அதுவரையிலும் ஐம்பது மூட்டைகளை சுமந்து செல்ல இயலுமா?' என்று யோசித்தான் கண்ணப்பன்.எப்படியும் நமக்கு நூறு ரூபாய் தேவைப் படுகிறதே... இந்த ஊரில் வேறு யார் நமக்கு நூறு ரூபாய் கடனாகக் கொடுப்பர்? அதனால், நாம் மூட்டைகளைச் சுமந்து சென்று பண்ணையாரிடம் இருந்து நூறு ரூபாயினை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். பின்னர் நம்மிடம் இருக்கிற நெல்லைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று நூறு ரூபாய் சேர்த்து பண்ணையாருக்கு கொடுத்திட வேண்டியதுதான்' என்று மனதில் எண்ணிக் கொண்டவனாய் நெல் மூட்டைகளை சுமந்து செல்ல முடிவு செய்தான் கண்ணப்பன். உடனே அவன் பண்ணையாரை நோக்கினான். ஐயா! நான் மூட்டைகளைத் தூக்கத் தயாராக இருக்கிறேன். மூட்டை எந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மட்டும் என்னிடம் தெரியப்படுத்துங்கள்!'' என்றான்.
பண்ணையாரும் தன் வேலையாளை அழைத்து, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் செல்லுமாறு கூறினார். கண்ணப்பனும் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.அங்கிருந்த மூட்டைகள் ஒவ்வொன்றாக எடுத்து அரிசி ஆலைக்குள் கொண்டு சேர்த்தான். எப்படியாவது பண்ணையாரிடம் இருந்து நூறு ரூபாயினை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், மிகவும் சுறுசுறுப்பாக மூட்டைகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டான் கண்ணப்பன்.அரிசி ஆலைக்குச் சென்ற பண்ணையாரும், அவன் ஐம்பது மூட்டைகளைக் கொண்டு சேர்த்து விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டார். உடனே அவர் கண்ணப்பனை தன் அருகே அழைத்தார்.
கண்ணப்பா! இதோ நீ கேட்ட நூறு ரூபாய் பணம். அதோடு நீ மூட்டைத் தூக்கி வந்த கூலியும் நூறு ரூபாய் இருக்கிறது. அதோடு நான் உனக்கு வெகுமதியாக கொடுக்கிற நூறு ரூபாயும் இதில் இருக்கிறது. ஆக மொத்தம் நான் உனக்கு முன்னூறு ரூபாயினைக் கொடுக்கிறேன்,'' என்று அவன் முன்னே பணத்தை நீட்டினார்.
கண்ணப்பனோ இதனை எதிர்ப்பார்க்கவில்லை. உழைப்பை மதிக்கிற பண்ணையாரின் பண்பினைப் போற்றிப் புகழ்ந்தபடி அந்த முந்நூறு ரூபாயினை வாங்கிக் கொண்டான். பின்னர் பண்ணையாருக்கு நன்றி கூறியபடி தச்சர் வீட்டிற்குப் புறப்பட்டான்.அப்போது பண்ணையார், கண்ணப்பா! நீ ஒரே மூச்சில் ஐம்பது மூட்டைகளை சுமந்து வந்திருக்கிறாய். அதனால், உன் உடம்பு மிகவும் களைப்பாக இருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த ஆலையில் வேலை செய்பவர்களுக்குச் சாப்பாடு தயாராகும் சமையல் அறைக்குச் சென்று, உனக்கு வேண்டுமளவுக்குச் சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாறி செல்!'' என்றார்.
பண்ணையர் அவ்வாறு கூறியது அவனுக்கு மேலும் வியப்பனை அளித்தது. உடனே அவன் சமையல் அறையை நோக்கிச் சென்றான். அதற்குள் அங்கிருந்த வேலையாள் ஓடோடி வந்து கண்ணப்பனை, சமையல் அறைக்கு அழைத்துச் சென்று வேண்டுமளவுக்கு உணவு கொடுத்து உபசரித்தான். கண்ணப்பன் உணவு உண்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கிருந்து சென்றான்.கண்ணப்பன் வேகமாக தச்சரின் வீட்டை வந்தடைந்தான். கண்ணப்பா வா வா! சற்று நேரம் இப்படி அமர்ந்து கொள். வேறு ஒரு அவசர வேலை எனக்கு இருக்கிறது. நான் அந்த வேலையை முடித்து விட்டு பின்னர் உன் ஏரை சரி செய்து தருகிறேன்! என்றார் தச்சர்.கண்ணப்பனும் பொறுமையுடன் தச்சர் சொன்னபடியே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். தச்சர் அவசரமாக உளியினால் ஓர் மரக்கம்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது உளி தவறுதலாக அவர் கையில் பட்டு ரத்தம் கொட்டியது.அதனைக் கண்ட கண்ணப்பனோ பதறியபடி எழுந்தான். உடனே தனது வேட்டியின் ஓரத்தை கிழித்து ரத்தம் வெளியே கொட்டாதபடி அவர் கைவிரலில் நன்றாகக் கட்டினான்.
தச்சரே! அப்படியே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் என் வீட்டிற்குச் சென்று மருந்து எடுத்து வருகிறேன். அந்த மருந்தை எடுத்துப் போட்டால் கை விரல் காயம் குணமடைந்து விடும்!'' என்று தன் வீட்டைநோக்கி ஓடினான்.
சிறிது நேரத்தில மருந்துடன் வந்தான் கண்ணப்பன். ""தச்சரே! இந்த மருந்தானது மூலிகைகளால் செய்யப்பட்டதாகும். இது விசேஷமான மருந்து. இந்த மருந்தை நீங்கள் உங்கள் கைவிரலில் போட்டுக் கொண்டால், வெட்டுப்பட்ட காயமானது எளிதில் குணமடைந்துவிடும்,'' என்றான் கண்ணப்பன்.
கண்ணப்பன் மூச்சிரைக்க ஓடி வந்து கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்ட தச்சரும், அந்த மருந்தை தனது கை விரலில் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் வலி நின்றது. கண்ணப்பன் சொன்னது போன்று அது உயர்ந்த மருந்தாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். உடனே கண்ணப்பன் தச்சரை நோக்கினான்.ஐயா! இப்போது உங்கள் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்தோடு நீங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. எனவே, முடிந்தால் நாளை என் ஏரை சரி செய்து கொடுத்தால் போதும். நீங்கள் கேட்டபடி நூறு ரூபாய் இப்போது வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்,என்று அவர் முன்னே நூறு ரூபாயை நீட்டினான் கண்ணப்பன்.அந்த நூறு ரூபாயை பார்த்ததும் தச்சர் கண் கலங்கிவிட்டார்.
கண்ணப்பா! உன்னை நான் சாதாரண விவசாயிதானே என்று நினைத்தேன். ஆனால், உனக்குள் இருக்கும் அன்புள்ளத்தை இப்போது நான் புரிந்து கொண்டேன். என் கைவிரலில் காயம் ஏற்பட்டதற்கு துடிதுடித்து விட்டாயே; நீ அணிந்திருக்கிற வேட்டியைக் கூடக் கிழித்து என் வீரல் காயத்திற்குக் கட்டுப்போட்டாயே. அதோடு மட்டுமல்லாமல் மூச்சிரைக்க ஓடி வந்து காயத்திற்கு மருந்தும் கொடுத்தாயே...உன்னிடம் நான் எப்படி பணம் வாங்க முடியும்? என் கை விரல் சற்று ஆறியதும் உனக்கு நானே புது ஏர் ஒன்றை செய்து தருகிறேன். அதற்கு நீ பணம் கொடுக்க வேண்டாம். நீ என்னிடம் காட்டிய உள்ளன்புக்குப் பரிசாக அந்த ஏரினை நான் செய்து கொடுக்கிறேன்!'' என்றார் தச்சர்.தச்சர் இவ்வாறு கூறுவார் என்று கண்ணப்பன் சற்றும் நினைக்கவில்லை. அவன் மிகவும் மனமகிழ்ச்சியுடன் அவரிடம் இருந்து விடைபெற்று, வீட்டிற்குப் புறப்பட்டான். தச்சரும் தான் சொன்னது போலவே அவனுக்கு அழகான ஏர் ஒன்றை செய்து கொடுத்தார்.குட்டீஸ்... பொறுமையோடு உழைப்பவர்களுக்கு கடவுள் தரும் பரிசுகளை பார்த்தீர்களா?
11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
நேர்மை

தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான். பணத்தையே பிரதானமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.

தனது மூன்று மகன்களையும் அழைத்து, ''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போது தான் தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன். ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,'' என்றார். பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார். அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர்.

வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான், ''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை. எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' என்றான்.

இரண்டாமவன் உடனே சொன்னான், ''நீ பரவாயில்லை. எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்" என்றான்.

கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து, ''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா? அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,'' என்று கன்னாபின்னாவெனத் திட்டினான். அண்ணன்கள் இருவரும், ''பரவாயில்லை, நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?'' என்று கேட்டனர்.

கடைக்குட்டி சொன்னான், ''நான் நேர்மையானவன். அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.'' 
என்றான்.
11111111111111111111111111111111111111111111111111111111111111111111111

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.

அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.

பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.

''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.



(#எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.)

11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

அழகான குழந்தை

தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும்தாழ்வு மனப்பான்மைகொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

நீ அழகாய் இருக்கிறாய்உன்னை நேசிக்கிறேன்” என்று அவளிடம் தந்தைஅடிக்கடி சொல்லி வளர்த்தார்.
அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது.

ஊக்கம் உயர்ந்ததுஉருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன.

அழகிலும் அறிவிலும் தனித்தன்மை மலரும் விதமாய் வளர்ந்தாள்.

பதினெட்டாவது பிறந்த நாளில் பரிசு வழங்கிய தந்தை சொன்னார்,

நீ மிகவும் அழகான குழந்தைஉன்னை நேசிக்கிறேன்”.

வள் தோழிகளிடையே அறிவித்தாள்,

நான் அழகாய் இருப்பதால் என் குடும்பம் என்னை நேசிக்கவில்லை.
என் குடும்பம் நேசிப்பதால் நான் அழகாய் இருக்கிறேன்”.

நேசிக்க பழகுங்கள் உங்கள் உலகமே அழகாய் மாறும் !!!
_ நன்றி!  தோழி சித்ரா.

No comments: