Wednesday 27 March 2013

நவபாஷண சிலையின் ரகசியம்

பழனி ஆண்டவர் நவபாஷண சிலையின் ரகசியம் என்ன? - விஞ்ஞானியின் ஆய்வறிக்கை !


இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன.
ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது. சமஸ்கிருதத்தில் 'நவ' என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 'நவ' என்றால் 'புதியது' அல்லது 'ஒன்பது' என்ற அர்த்தங்கள் உள்ளன. அது போலவே 'பாஷணம்' என்றால் 'விஷம்' அல்லது 'தாதுப் பொருட்கள்' என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான 'போகர்' என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.
பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது.
ஆகவே அந்த சிலை மேலும் பழுதடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அதற்கான வாழிமுறைகளை கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது. நல்ல கல்விமானும், பெரும் தெய்வ பக்தி மிகுந்தவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்தது பார்த்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு தரக் கூடிய வகையில் கருத்துக்களைத் தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள்:
பெரிய மடங்களின் மடாதிபதிகள், சமயத் தலைவர்கள்
புகழ் பெற்ற ஸ்தபதிகள்
ஆகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
பூசாரிகள் மற்றும் பண்டாரங்கள்
விஞ்ஞானிகள்

அந்த குழுவில் இருந்த ஒரு விஞ்ஞானி சிலை குறித்து தாங்கள் நடத்தி ஆய்வு விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த விஞ்ஞானியின் அறிக்கை :

"நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அந்த மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது. நாங்கள் உண்மையைக் கண்டறியும் குழுவில் இருந்ததினால் மூலவரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை இன்னமும் என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை ஆராய்ந்து பார்த்தோம். சிலையின் முகமோ எந்த விதமான சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலையைப் போலவே காணப்பட்டதைக் கண்டு வியந்தோம். பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின் நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது. இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது.
மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது. அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.

அடுத்த செய்தி, கர்பக் கிரகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்களுக்கும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த தொடர்புப் பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்பினால் சில விஷமிகள் அவ்வப்ப்போது அந்த சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து இருக்கலாம், அதைக் கொண்டு அவர்கள் சில மருந்துகளை தயாரித்து இருக்கலாம் என்பதினால்தான் சிலை பழுதடைந்து உள்ளது எனப் பரவலாக கூறப்பட்டது. ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலை எதோ ஒரு வகையிலான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளது போல தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞான பூர்வமாக எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதின் காரணம் அந்த சிலையில் இருந்து விழுந்த எந்தப் பொடித் தூள்களுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த சீலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத்தூள்களை சோதனை செய்யும் கருவியான 'பேர்க்கின் எல்மார் ௭௦௭' எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம். பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே.
அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயாரித்து தலைமை செயலாளருக்கு அனுப்பினோம். அவரும் அவற்றுக்கு தேவையான மேற் குறிப்புக்களுடன் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தார். அந்த சிலையின் உருவ பாதுகாப்பைக் கருதி அந்த சிலைக்கு பயன்படுத்தி வந்த அபிஷேகப் பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படித்தான் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இன்னொரு வதந்தியும் நிலவிக் கொண்டு இருந்ததைக் கண்டோம். அந்த செய்தி என்ன என்றால் சித்த முனிவரான போகர் பழனியில் தான் செய்து வைத்து இருந்த சிலையைப் போலவே மூன்று சிலைகளை செய்ததாகவும், அவற்றில் இரண்டு சிலைகளை பூமியில் எங்கேயோ மறைத்து வைத்து உள்ளதாகவும், தக்க சமயத்தில் தெய்வீகப் பிறவி ஒருவர் அதைக் கண்டுபிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தி பழுதடைந்து உள்ள சிலையை மாற்றி அமைப்பார் என்பதே. இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ''மனித குலத்துக்கு தான் செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்''

முருகனுடைய சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை  ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார். 

No comments: