Monday 7 November 2016

மேரிகியூரியின் வாழ்க்கை(Marie Curie)




இன்று மேரிகியூரி பிறந்தநாள் (07.11.1867)
மேரி கியூரி வரலாறு க்கான பட முடிவு மேரி கியூரி வரலாறு க்கான பட முடிவு


 மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.

இவரது சாதனைகளுள் முதன்மையானவை பின்வருமாறு:
  • கதிரியக்கம் ( இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு
  • கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும்
  • இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம்ஆகியனவற்றை கண்டுபிடித்தல். இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் குயூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்று திகழ்கின்றன. முதலாம் உலகப் போரின் போது, இராணுவ துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார்.
ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் , மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா-குயூரி (இவர் இரண்டு குடும்பபெயர்களையும் பயன்படுத்தினார்), தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுதந்தார். மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கவரவிக்கும் வகையில் போலோநியம் என்று பெயரிட்டார்.

கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.

No comments: