Pages

Wednesday, 11 June 2014

செ.மதன்

வயது  ஆறு  ஆனால்
மூன்று வயது தேற்றம் (M .D)
செ.மதன்  இன்று பள்ளியில் சேர்ப்பு 

இங்கிலீஷ் மீடியத்திலிருந்து தமிழுக்கு

 எண்கள் பள்ளியில் இங்கிலீஷ்  மீடியத்திலிருந்து  தமிழ் வழியில் பயில  நான்காம்  வகுப்பில்  சேர்ந்துள்ள  திருக்கொள்ளிகாட்டை சேர்ந்த செல்வமணி -மேனகா  ஆகியோரின்  அன்புமகள் சுஸ்மிதா 
சுஸ்மிதா

ஓவிய போட்டி

எங்களது  கீராலத்தூர் தொடக்கப்பள்ளியில் இன்று மழைநீர் சேகரிப்பு பற்றிய  ஓவிய போட்டி  சிறப்பாக நடைபெற்றது .அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். அதில் ஐந்தாம் வகுப்பு மாணவி  அ.அபிதா  முதல்பரிசை பெற்றாள் 


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

எங்களது  கீராலத்தூர் தொடக்கப்பள்ளியில் இன்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது .



Wednesday, 4 June 2014

பயிற்றுநர் பார்வை


















நேற்று (03.06.14)செவ்வாய்க்கிழமை  வட்டார வளமைய ஆசிரிய  பயிற்றுநர் திருமதி  பாபி அவர்கள் பள்ளியை பார்வையிட்டு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை ,பாடக்குறிபேடுகள் ஆகியன  வழங்கப்பட்டதை உறுதி செய்தபின் அனைத்து மாணவர்களின்  வாசித்தல் திறனை சோதித்து திருப்தி  அடைந்தார் . 


இன்று (04.06.14)புதன்கிழமை  மாற்று திறனாளி மாணவர்களை  கண்டறிய சிறப்பாசிரியர்  செல்வி விஜயலட்சுமிஅவர்கள் வருகை புரிந்தார். மாணவர்கள் மதன்,செல்வபிரவின்  ஆகியோரை பார்வையிட்டு சென்றார்கள்.

Monday, 2 June 2014

பள்ளி திறந்தாச்சு

இன்று (02.06.2014) பள்ளி திறக்கப்பட்டது.
வருகை  குறைவாகவே இருந்தது.
வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகம் ,பாடகுறிப்பேடுகள்  சீருடை  ஆகியன வழங்கப்பட்டது.
முதல் வகுப்பில்  ஒரு மாணவி   நந்தனா சேர்ந்தாள்.